வாழ்க்கை முறையை மாற்றினால் ஆரோக்கியம் : விழிப்புணர்வு தருகிறது சி.டி.எப்.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:23

''சர்க்கரை கட்டுப்பாடு என்பது, எச்பிஏ1சி- 7 சதவீதத்துக்குள் இருந்தால் மட்டுமே, பின்விளைவுகள் ஏற்படாது; வாழ்க்கை முறை மாற்றமே, உண்மையான கட்டுப்பாட்டையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது,'' என்கிறார், கோயம்புத்துார் டயபடீஸ் பவுண்டேஷன் தலைமை சர்க்கரை நோய் நிபுணர் சேகர்.மேலும் அவர் கூறியதாவது:சர்க்கரை பாதிப்பு அறிகுறி இல்லாததால், அனைத்தும் நன்றாக இருப்பதாக பலரும் நினைக்கின்றனர்.


தாங்களாகவே ரத்த பரிசோதனை செய்து கொண்டு, மாத்திரை மட்டும் தொடர்ந்து உட்கொண்டு வருகின்றனர்; இது, தவறு. ரத்தத்தில், சர்க்கரையின் அளவு, தினமும் மூன்று முறை ஏறி இறங்குகிறது. இதில், எப்போதாவது பரிசோதனை செய்து கொண்டு முடிவெடுப்பது சரியல்ல. ஆண்டுக்கு ஒருமுறை, இதற்கென பிரத்யேக பரிசோதனை செய்ய வேண்டும்.விழிப்புணர்வே கிகிச்சை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நடைபயிற்சி மேற்கொண்டால் மட்டுமே சர்க்கரை குறையும். சர்க்கரை நோய் கல்வி குறித்து, சி.டி.எப்., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சி.டி.எப்., மருத்துவமனை மற்றும் கிளைகளில், தினமும் காலை இரண்டு மணி நேரம், ஒலி, ஒளி நிகழ்ச்சிகள், கேள்வி - பதில், கலந்துரையாடல், சமையல் செயல்முறை விளக்கம் மற்றும் உடற்பயிற்சி கற்றுத் தரப்படுகின்றன.வாழ்க்கை முறை மாற்றமே, உண்மையான கட்டுப்பாட்டையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகள், பருப்பு, பயறு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்பது; நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்வது; துரித உணவுகளை தவிர்ப்பது; ஆறு மணி நேர உறக்கம்; மன அழுத்தம் இல்லாமல் இருத்தல் போன்றவையே, வாழ்க்கை முறை மாற்றமாகும்.உடலிலுள்ள அனைத்து தசை நார்களுக்கும் பயிற்சி அவசியம். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவை இங்கு கற்றுத்தரப்படுகின்றன. 'டயட் கிச்சன்' என்ற இயற்கை உணவகம் செயல்படுகிறது. இதில், சிறுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. 75 சதவீத சர்க்கரையை, வாழ்க்கை முறை மாற்றத்தாலேயே கட்டுப்படுத்த முடிகிறது.சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கால் பாதிப்பு பரிசோதனை, உரிய சர்க்கரை மாத்திரையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.


ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு, சத்தி, கோபி, ஊட்டி கிளைமையங்களில் தொடர் சிகிச்சை பெறலாம். ஆர்.எஸ்.புரம் மையம், திங்கள்முதல் சனி வரை, காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை செயல்படும்.முழு உடல் பரிசோதனை முகாம், இன்று முதல், டிச., 13ம் தேதி வரை நடக்கிறது. மருதமலை மையத்தில், ஞாயிறன்றும் பரிசோதனை செய்து கொள்ளலாம்; முன்பதிவு அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.விபரங்களுக்கு, கோயம்புத்துார் டயபடீஸ் பவுண்டேஷன், ஐ.ஓ.பி., காலனி, மருதமலை, கோவை - 46. மொபைல் போன் எண்: 90259 66888, 73395 95999.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X