பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:33

புதுச்சேரி:பொது இடங்களில் குப்பை கொட்டியது தொடர்பாக உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 1,094 பேருக்கு அபராதம் விதித்து 1.52 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரியில் அனைத்து நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்கள் துார்வாரப்பட்டு வருகி றது. அதே போல உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வாய்க்கால்களும் துார்வாரப்பட்டு வருகிறது. துார்வாரிய வாய்க்கால்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. உள்ளாட்சித் துறை நகரை துாய்மையாக வைத்துக்கொள்ளவும் மற்றும் தங்குதடையின்றி வாய்க்கால்களில் மழை நீர் செல்லவும் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் பொதுமக்கள், வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.எனவே பொதுமக்கள் குப்பைகளை வாய்க்கால், காலிமனைகள், வீதியில் கொட்ட வேண்டாம். குப்பை தொட்டியில் மட்டுமே குப்பையை கொட்ட வேண்டும். அல்லது வீட்டிற்கு வரும் ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் அவர்களது வியாபார ஸ்தலங்களில் கட்டாயமாக குப்பை தொட்டி வைக்க வேண்டும். வியாபார ஸ்தலங்களை சுற்றி குப்பை சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இதனை செய்ய தவறி னால் உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர்களால் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறுபவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பல இடங்களில் ஆய்வு செய்து, வீதிகள் மற்றும் வாய்க்கால்களில் குப்பை, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.இதுவரை சுகாதார ஆய்வாளர்கள் 1,094 பேருக்கு அபராதம் விதித்து 1.52 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். அபராதம் செலுத்த மறுக்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் ஸ்வச்சதா ஊழியர்கள் சென்று குப்பைகளை வாங்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு ஸ்வச்சதா ஊழியர்கள் வரவில்லை அல்லது வேறு குறைகள் இருப்பின், உழவர்கரை நகராட்சி கட்டுப்பாட்டு அறையை 0413-2200382 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தெரிவிக்கலாம். பல்வேறு நகர்களில் இயங்கி வரும் குடியிருப்போர் நல சங்கங்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X