| மண்வள பாதுகாப்பு முகாம் Dinamalar
மண்வள பாதுகாப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:40

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் வட்டார வேளாண் துறை சார்பில் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.துணை வேளாண் அலுவலர் சாந்தலட்சுமி வரவேற்றார். உதவி இயக்குநர் சாந்தி தலைமை தாங்கி பேசுகையில், மண் வளம் பாதுகாக்க மண்புழு உரம்‚ ஊட்டமேற்றிய தொழு உரம்‚ பசுந்தாள் உரம் மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவையான அளவு உரங்களை பயன்படுத்தி செலவை குறைக்கலாம். விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக மண்வள அட்டைகளை பராமரிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி‚ உதவி வேளாண் அலுவலர்கள் மகாதேவன்‚ குமார்‚ உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி‚ மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X