அதிகாரிகள் பேச்சுவார்த்தை சாலை மறியல் வாபஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:01

திண்டிவனம்:திண்டிவனம் - சென்னை சாலையில் மின் விளக்குகள் எரியாததை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.திண்டிவனம்-சென்னை புறவழிச்சாலை யில், சாரம் பிடிஓ., அலுவலகம் எதிரில் இருபுறத்திலும் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் கடந்த பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் இறந்துள்ளனர்.இதே போன்று, இந்த புறவழிச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், சலவாதி முதல் ஓங்கூர் வரையில் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு வந்ததால், அப்பகுதியில், மின் விளக்குகளை சீர் செய்யக் கோரியும், புதிய மின் விளக்குகள் பொருத்த வலியுறுத்தியும், நேற்று காலை, 10:00 மணிக்கு, சாரம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே சாலை மறியல் நடத்த, ஒலக்கூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி., திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன், நகாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நகாய் மூலம், சலவாதி முதல் ஓங்கூர் டோல்கேட் வரையில் உள்ள கிராம சந்திப்புக்களில், மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று, பொது மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X