விழுப்புரத்தில் அதிநவீன உழவர் சந்தை அமைக்க....நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகள் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:05

-நமது நிருபர்-

விழுப்புரம் உழவர் சந்தை கட்டடத்தை இடமாற்றம் செய்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை கட்டடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டமாக உள்ளது. மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் விவசாய தொழிலை சார்ந்துள்ளனர். மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் வேளாண் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, விழுப்புரம் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாரச்சந்தைகள் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் பல இடங்களில் வாரச்சந்தைகள் காணாமல் போய்விட்டன.இதேபோன்று, கிராமப்புற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை, நகரங்களில் விற்பனை செய்ய உழவர் சந்தை அமைக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் நேருஜி ரோடு, ரயில் நிலையம் அருகே நகராட்சி இடத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.இந்த உழவர் சந்தையை கடந்த 2000ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு 35 கடைகளுடன் சந்தை கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் விழுப்புரம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் கீரை உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர்.இந்த உழவர் சந்தை போதிய இடவசதியின்றி, நெரிசல் மிகுந்த குறுகலான இடத்தில் செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்படுவதால், குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே உழவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். மீதமுள்ள மக்கள் நகரில் உள்ள வெளி மார்க்கெட்டிற்கு செல்கின்றனர்.இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை உழவர் சந்தையில் முழுமையாக விற்பனை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக அறுவடை செய்த பொருட்களை விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, விழுப்புரத்தில் இட நெருக்கடியில் செயல்படும் உழவர் சந்தை கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அல்லது பழைய பஸ் நிலையம் அருகில் காலியாக உள்ள நகராட்சி இடங்களில் பிரமாண்டமான கட்டடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதாவது, உழவர் சந்தைக்கு விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள், பொருட்கள் விற்பனையாகாத சமயங்களில் பொருட்களை வீணாக தரையில் வீசிவிட்டு செல்கின்றனர். இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.இதனால், விழுப்புரத்தில் அதிநவீன உழவர் சந்தை அமைத்து, விவசாய விளை பொருட்கள் பாதுகாத்து வைக்க குளிரூட்டப்பட்ட அறை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் மூலம், ஒரு நாள் விற்பனையாகாத பொருட்களை, குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாத்து வைத்து மறுநாள் விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் தடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.எனவே, விழுப்புரத்தில் விவசாயிகளின் நலன் கருதி அதிநவீன உழவர் சந்தை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X