ஆக்கிரமிப்பால் குறுகி வரும் பொன்பத்தி ஏரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:16

செஞ்சி:செஞ்சி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து வரும் பொன்பத்தி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் செஞ்சி நகரம் விரைவில் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது.முன்னோர்கள் விவசாயத்திற்காக உருவாக்கிய ஏரிகளே, இப்போது நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து வருகின்றன. இலவச மின்சாரம் வழங்குவதற்கு முன்பு வரை விவசாயிகளின் ஜீவாதாரமாக ஏரி இருந்தது. அதன் பிறகு ஏரியை விவசாயிகள் பாதுகாக்க தவறி விட்டனர்.தனியார்கள் ஏரிகளை ஆக்கிரமித்து அழித்து வருகின்றனர். புராதான நகரான செஞ்சியை சுற்றி ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் முக்கிய நீர்நிலைகளாக பி. ஏரி, பொன்பத்தி ஏரி, சிறுகடம்பூர் ஏரிகள் உள்ளன.செஞ்சி கோட்டை செட்டிகுளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பால் பி. ஏரிக்கு பல ஆண்டுகளாக சரிவர தண்ணீர் வரவில்லை. கூடப்பட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீர் வரும் சிறுகடம்பூர் ஏரி, அதிக மழை பொழியும் காலத்தில் மட்டும் நிரம்பும்.பெரிய ஏரியான பொன்பத்தி ஏரிக்கு பாக்கம், சொன்னாலுார், சோமசமுத்திரம், பெருங்காப்பூர் காட்டு பகுதியில் இருந்து மழைநீர் வரும். 370 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்பத்தி ஏரிக்கு நீர் வரத்து அதிகம். ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் மூன்று போகமும் விளையும்.இந்நிலை கடந்த 20 ஆண்டுகளில் மாற்றமடைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் கரைகளை ஆக்கிரமித்து ஏராளமான வீடு, கடைகளை கட்டியுள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு நீர் பிடிப்பை குறைக்க உபரி நீர் செல்லும் பகுதியின் உயரத்தை குறைத்தனர். ஏரியின் இரண்டு மதகையும் சரியாக பராமரிக்காமல் போனதால் 2015ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் நிரம்பி இருந்ததால், உடைப்பு பெரிதாகி நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என கருதிய பொதுப்பணித்துறையினரும், கிராம பொது மக்களும் சேர்ந்து மதகிலும், அதை சுற்றியும் மணல் மூட்டைகளை அடுக்கி, டிராக்டர்களில் மண்ணை அடித்து வந்து கொட்டியும் மதகு உடையாமல் தடுத்தனர்.அப்போது இரண்டாவது முறையாக உபரி நீர் செல்லும் பகுதியின் உயரத்தை உடைத்து ஏரியை காப்பாற்றினர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஏரியின் மதகையும், உபரி நீர் செல்லும் பகுதியையும் சரி செய்ய பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.கடந்த வாரம் பெய்த மழையினால் ஏரி இரண்டு மாதம் பாசனம் செய்யும் அளவிற்கு தண்ணீர் நிரம்பியது. மதகுகள் செயல் இழந்து விட்டதால், ஏரியில் இருந்து பாசனத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பில் ஏரியின் மொத்த பரப்பளவில் 111 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டதால், தற்போது அதிகரித்துள்ளது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் ஓடையும் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் விவசாயத்திற்கு பயன் இல்லாத ஏரியாகி, ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும். தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற துவங்குவார்கள். இதனால் செஞ்சி நகரும், சுற்றி உள்ள கிராமங்களும் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே ஏரி மதகுகளை சரி செய்து, தண்ணீரை விவசாய பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, உபரி நீர் செல்லும் வழியின் உயரத்தை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசுத்தமாகும் தண்ணீர் ஏரிகரையில் வீடுகட்டியுள்ள பலரும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் அசுத்தம் அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இது ஏரி தண்ணீரில் கலக்கும் போது பெரும் கொள்ளை நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X