| திருந்தி வாழ்கிறோம்: குற்றவாளிகள், எஸ்.பி.,க்கு மனு Dinamalar
திருந்தி வாழ்கிறோம்: குற்றவாளிகள், எஸ்.பி.,க்கு மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:18

விழுப்புரம்:கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மூவர் திருந்தி வாழ்வதாக, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.கண்டமங்கலத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அப்பு(எ)முருகன்,28; கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரூபானந்தன் மகன் சீனுவாசன், 22; மரியசூசை மகன் டெனி (எ)ஜெனீஸ் ஆகியோர் நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:நாங்கள் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அறிவழகனின் கூட்டாளிகளாக இருந்தோம். அப்பு(எ)முருகன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12 வழக்குகள் உள்ளது. சீனுவாசன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 6 வழக்குகளும், டெலி (எ) ஜெனீஸ் மீது கொலை உள்பட 3 வழக்கு கள் உள்ளன. நாங்கள் கடந்த பல மாதங்களாக எவ்வித குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறோம்.எங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை, போலீசார் அழைக்கும் நேரத்தில் ஆஜராகி, முடித்து கொள்கிறோம். எங்கள் குடும்பங்களின் நிலையை புரிந்து, இனி நாங்கள் எந்தவித குற்ற செயல்களுக்கும் செல்லாமல் திருந்தி வாழ்வதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X