| பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Dinamalar
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:19

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி பிரசாரம் நடந்தது.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களுடன் சென்றனர்.கடைவீதியில் மனித சங்கிலியில் ஈடுபட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் சமுதாய அமைப்பாளர் சாமுண்டீஸ்வரி, இளநிலை உதவியாளர் கலியமூர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X