| ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அறிவியல் கண்காட்சி Dinamalar
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அறிவியல் கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:21

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, கலெக்டர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பில் மாவட்டத்தின் அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.கலெக்டர் சுப்ரமணியன் கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளின் அறிவியல் சார்ந்த படைப்புகளை பார்வையிட்டார். இதில், 100 பள்ளிகளில் இருந்து 253 மாணவர்கள் பங்கேற்று, பாதாள சாக்கடையை இயந்திர சக்தி மூலம் சுத்தம் செய்தல், ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கினால் குழாயின் பின்பகுதியில் காற்று ஏற்றக்கூடிய பொருளை குழாயில் அனுப்பி, பின் காற்று மூலம் குழந்தையை மேலே கொண்டு வரும் முறை, மாசு சுத்திகரிப்பு, திருடர்கள் அலாரம், சைக்கிளில் ஏர் உழும் கலப்பை உள்பட பல அறிவியல் சார்ந்த படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியில், சி.இ.ஓ., முனுசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) உதவி திட்ட இயக்குநர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணபிரியா, ரத்தினசெல்வி, ரோஸ்நிர்மலா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X