| பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது Dinamalar
பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:40

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே உறவுக்கார பெண்ணை காதலித்து‚ திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் செங்கேனி மகன் செல்வராஜன்‚ 34. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்தார்.அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.இது குறித்து புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜன் மற்றும் அவரது அண்ணன் சுந்தர்ராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, செல்வராஜனை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X