விபத்து நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் விழுப்புரத்தில் 'ஜப்தி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:43

விழுப்புரம்:விழுப்புரத்தில் விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.விழுப்புரம் அருகே எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,50; விவசாயி. கடந்த 2007 ம் ஆண்டு ஆக., 27 ம் தேதி, இவர் மற்றும் அவரது மனைவி திலகவதி, உறவினர் பிருந்தாவதி ஆகியோர் காரில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.வளவனுார் அருகே குடுமியாங்குப்பம் வந்த போது, எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ் கார் மீது மோதியது. காயமடைந்த சுந்தரமூர்த்தி உள்பட மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.விபத்து தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க கோரி சுந்தரமூர்த்தி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி வெற்றிச்செல்வி, பாதிக்கபட்ட சுந்தரமூர்த்திக்கு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக 13 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.இந்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், சுந்தரமூர்த்தி சார்பில், வழக்கறிஞர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்தபோது, நீதிபதி காந்தி, அரசு போக்குவரத்து கழகம் வட்டியோடு சேர்த்து 19 லட்சத்து 28 ஆயிரத்து 660 ரூபாயை சுந்தரமூர்த்திக்கு வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வழங்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் புதுச்சேரி புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் பாக்கியராஜ் ஜப்தி செய்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X