விழுப்புரம் அருகே வங்கி முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:44

விழுப்புரம்:விழுப்புரம் அருகே அரசு உதவித்தொகையை பிடித்துள்ளதாக கூறி வங்கியை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அருகே திருப்பாச்சனுாரில் உள்ள ஒரு தேசியமயமாக்கபட்ட வங்கி மூலம் 450க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை, விதவை, முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த வங்கியில் 140 பேர் கடன் பெற்றிருப்பதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, கடனுக்கு பதிலாக அவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை கடந்த 8 மாதங்களுக்கு மேலாக வங்கி அதிகாரிகள் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 11.30 மணிக்கு, வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது 'நாங்கள் வங்கியின் கடன் பெற்றிருப்பதாக கூறி, எங்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகையை பிடித்துள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை பிடித்துள்ளனர். நாங்கள் வங்கியில் கடன் பெறாத நிலையில், மகளிர் சுயஉதவிக்குழுவில் கையெழுத்து போட்டதை வைத்து எங்கள் பெயரில் யாரோ கடன் பெற்றுள்ளனர். இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதிலளிக்க மறுக்கின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையில் பிடித்தம் செய்த தொகையை மீண்டும் எங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என, பொது மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார், வங்கி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மக்கள் போராட்டத்தை கைவிட்டு 12.45 மணிக்கு கலைந்து சென்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X