'புகையுது' குப்பை மேட்டரு! அணைக்கப்பார்க்கிறது மாநகராட்சி:  கண்காணிப்புக்குழு நீதிபதியிடம் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:48

கோவை;'கோவையில், 64 இடங்களில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கப்படும்' என, கண்காணிப்பு குழு நீதிபதியிடம், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று உறுதியளித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. குறிப்பிட்ட சில வார்டுகளிலும், குடியிருப்புகளிலும் தரம் பிரித்து சேகரித்தாலும், வெள்ளலுார் கிடங்கில் மொத்தமாகவே கொட்டப்படுகிறது. 4,000க்கும் மேற்பட்ட துப்புரவாளர்கள் பணிபுரிந்தாலும், வீதிகளில் குப்பை தேங்கியுள்ளது.


குப்பை மேலாண்மை படுமோசமாக இருப்பதால், சுற்றுவட்டார பகுதியில் சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர்மட்டம் பாதித்திருப்பது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்தில், ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.


கண்காணிப்பு குழு


இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், குப்பை மேலாண்மையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், கண்காணிப்பு குழு அமைத்தது.

இக்குழு விசாரணை, கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர்சிங், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்றனர்.


புகையுது ஆதாரம்


தரம் பிரித்து குப்பை சேகரிப்பதாக, மாநகராட்சி கூறினாலும், கிடங்குகளில் மொத்தமாக கொட்டுவதையும், தீ வைத்து எரிப்பதையும் மனுதாரர்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினர். மாநகராட்சி தரப்பில் சொல்லப்படும் திட்டங்கள் அனைத்தும், ஆவணங்கள் வடிவில் மட்டுமே இருப்பதாக தெரிவித்தனர்.


மாநகராட்சி தரப்பில், 'புதிதாக, 3,000 துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்படுவர். தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணி துரிதப்படுத்தப்படும். பழைய குப்பையை அழிப்பதற்கான டெண்டர், ஜன.,15க்குள் இறுதி செய்யப்படும். 2019, மே மாதத்துக்குள், புதிதாக, 64 இடங்களில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கப்படும்; ஜன.,15க்குள், 10 இடங்களில் செயல்பாட்டுக்கு வரும்' என, உறுதி அளித்ததால், அடுத்த மாதத்துக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


அடுத்த மாதம் கூட்டம் கூடுவதற்கு முன், 10 மையங்களை நேரில் ஆய்வு செய்வதாக, நீதிபதி கூறினார். மாநகராட்சி உறுதி அளித்துள்ள பணிகளை, ஆறு மாதத்துக்குள் முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
07-டிச-201814:24:51 IST Report Abuse
Kundalakesi குப்பை திட்டத்திற்கு ஒதுக்கிய காசில் percentage போட்டு ஆட்டைய போட்டாச்சு. இப்ப நீதிபதி கேள்வியை கேட்டால் அதை செய்றேன் இதை செய்றேன்னு சொல்றேங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X