கத்தியை காட்டி ஆசிரியையிடம் நகை பறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
04:52

விழுப்புரத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, முகமூடி கொள்ளையர்கள் நகை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சாலாமேடு அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகராஜ், 50; அனந்தபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழியர். இவரது மனைவி ராஜலட்சுமி, 45; கல்யாணம்பூண்டி அரசு பள்ளி ஆசிரியை.இருவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி கொண்டு, திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு நேற்றிரவு 1.30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். முன்னதாக, டவேரா காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், நாகராஜ் வீட்டில் யாருமில்லாததை கண்டு அங்கு நிறுத்தியுள்ளனர். பின், காரில் இருந்து இருவர் மட்டும் முகமூடி அணிந்து கொண்டு, நாகராஜ் வீட்டின் பின்புறம் கதவின் தாழ்பாளை உடைத்து கொண்டு, வீட்டிற்குள் நகை மற்றும் பணத்தை தேடியுள்ளனர்.அங்கிருந்த, 1 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, நாகராஜ் அவரது மனைவி ராஜலட்சுமி வீட்டின் முன்பக்க கதவை திறந்தனர்.அப்போது, அங்கு மறைந்திருந்த முகமூடி கொள்ளையர்களில் ஒருவன், திடீரென ராஜலட்சுமி கழுத்தில் கத்தியை வைத்து நகையை கேட்டுள்ளார். பயந்து போன, ராஜலட்சுமி தனது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் செயினை கழற்றி தந்தவுடன், கொள்ளையர்கள் இருவரும், தயாராக காரில் இருந்த இரு மர்ம நபர்களோடு தப்பி சென்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதோடு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கோட்டைவிட்ட போலீஸ்பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 62 இடங்களில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர். அதோடு விழுப்புரம் நகரில் சாலாமேடு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், போலீஸ் சோதனையையும் மீறி, மர்ம நபர்கள் ஆசிரியை வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இது விழுப்புரம் நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X