| பள்ளி கழிப்பறைகளில் சுத்தம் பேண உத்தரவு Dinamalar
பள்ளி கழிப்பறைகளில் சுத்தம் பேண உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:05

மதுரை:அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் நடுநிலைப்பள்ளி, டி.மேட்டுப்பட்டி துவக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி கழிப்பறைகளை ஆய்வு செய்த கலெக்டர் நடராஜன், அவற்றை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார்.இந்த ஒன்றியம் மெய்யப்பன்பட்டியில் சாத்தையாறு உபவடி நிலப்பகுதிகளில் வேளாண் துறை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அமைந்த பாய் நாற்றாங்காலை கலெக்டர் பார்வையிட்டார்.


பின் பள்ளிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கழிப்பறைகளை சுத்தமாக பேணவும் உத்தரவிட்டார்.டி.நாயக்கன்பட்டியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுமான பணி, தெத்துாரில் 8.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம், கூலாண்டிபட்டியில் 90 ஆயிரம் ரூபாயில் வரப்பு அமைக்கும் பணி, 4.25 லட்சம் ரூபாயில் தடுப்பணை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட அவரை பந்தல், வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி சமத்துவபுரம், நாற்றாங்கால் தோட்டங்களை ஆய்வு செய்தார். மதுரைஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், வேளாண் இணை இயக்குனர் குமாரவடிவேல், தாசில்தார்கள் பார்த்திபன், செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் பழனிச்சாமி, கீதா பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X