| புறநகரில் தொடரும் போலி மது விற்பனை Dinamalar
புறநகரில் தொடரும் போலி மது விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:14

வாடிப்பட்டி:மதுரை புறநகர் பகுதிகளில் வெளிமாநில மற்றும் போலி மது விற்பனையை மதுவிலக்கு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். டீக்கடை, பெட்டி கடை, வீடுகளில் வைத்து போலி மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. கடந்த மாதம் சிந்துபட்டி அருகே போலி மதுபான தயாரிப்பு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இன்று வரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் சின்னாளபட்டி பகுதியில் இருந்து மதுரை மாவட்டத்திற்குள் போலி மது பாட்டில்கள் சப்ளை தொடர்கிறது. இச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு போலீசார் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X