| 600 பேருக்கு அபராதம் Dinamalar
600 பேருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:15

திருமங்கலம்:திருமங்கலம் நகராட்சியில் 60 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து கொசுப்புழு காணப்படும் 600 வீடுகள் குறித்த பட்டியல் நகராட்சி சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டது.இதைதொடர்ந்து அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் வீடுகளில் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திய பின்னரும் வீடுகளில் கொசுப்புழு இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X