2 வது திருமணம் செய்த பெண் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:20

காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே 2வது திருமணம் செய்த பெண் தற்கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.காளையார்கோவில் அருகே உள்ள கீழச்சாலுார் கிராமத்தை சேர்ந்த தவம் மனைவி செல்லம்மாள்,25. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த10 மாதங்களுக்கு முன்பு தவம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.கொல்லங்குடியை சேர்ந்த பாண்டி மகன் கண்ணன்,34. ஆட்டோ டிரைவர். திருமணமான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது ஆட்டோவில் அடிக்கடி சென்று வந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால், செல்லம்மாளை கண்ணன் 2 ம் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு செல்லம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு கண்ணன் தகராறு செய்துள்ளார்.கடந்த நவ., 26 ல் ஏற்பட்ட சண்டையின் போது கண்ணன் வீட்டில் வாங்கி வைத்திருந்த எலி பேஸ்ட் விஷமருந்தை சாப்பிட்டு செல்லம்மாள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த டிச., 1 ல் இறந்துவிட்டார்.செல்லம்மாளின் உறவினரான கீழச்சாலுார் அழகர் மகன் குத்துராஜ் கொடுத்த புகாரின்பேரில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் ஆட்டோ டிரைவர் கண்ணனை கைது செய்து விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X