உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:21

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் எப்போதுமதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்தது. அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். கட்டுமானத்திற்கு தாமதமின்றி நிதி ஒதுக்கி, டெண்டர் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பு செயலாளர், 'மத்திய நிதி செலவினக்குழுவின் கூட்டம் டிச.,4 ல் நடந்தது. அக்குழுவின் ஒப்புதல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் திட்ட அறிக்கை மத்திய கேபினட்டின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,' என அறிக்கை சமர்ப்பித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை பைசல் செய்தனர்.-----டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை என்னமதுரை முகமது யூனுஸ் ராஜா தாக்கல் செய்த மனு: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம், பணி அனுபவத்திற்கு ஏற்ப பதவி உயர்வு, உரிய பயணப்படி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.,4 ல் தமிழக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். டிச.,8 முதல் 13 வரை அவசரமில்லா ஆப்பரேஷன்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படுவர். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு முகமது யூனுஸ் ராஜா மனு செய்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, 'வேலைநிறுத்தத்தை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரக இயக்குனர் இன்று (டிச.,7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'என்றனர்.------ெஹல்மெட் அணியாத அமைச்சருக்கு நோட்டீஸ்சமூக ஆர்வலர் 'டிராபிக்'ராமசாமி தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிலர் விதிகளை மீறி உரிமம் இன்றி, ெஹல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றனர். இலுப்பூர் போலீசில் புகார் செய்தேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,ராஜன் செல்லப்பா மற்றும் சிலர் முன் அனுமதியின்றி நவ.,8 ல் மதுரை சினிப்பிரியா தியேட்டர் அருகே போராட்டம் நடத்தினர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தேன். இரு மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு 'டிராபிக்'ராமசாமி மனு செய்தார். நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பி, டிச.,17 க்கு ஒத்திவைத்தது.-------------ஆபாச, ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடுக்க வழிகாட்டுதல்மதுரை சிந்தாமணி நாடகக் கலைஞர் சீனிவாசன் தாக்கல் செய்த மனு: கோயில் திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் நம் பண்பாடு, கலாசாரம், மரபு மீறாமல் கலை நிகழ்ச்சியை ஆபாசம் இன்றி, குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில், நடத்தினோம். நம் பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், ஆபாச நடன நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு காவல்துறையினரே தலைமை ஏற்று, துவக்கி வைக்கின்றனர்.தமிழக பாரம்பரிய கலைகளை நம்பி வாழும் கலைஞர்களை பாதுகாக்க வேண்டும். ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவோர், அக்கலைக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தமிழக உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சீனிவாசன் மனு செய்தார். நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு: ஆபாசமின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை 3 மாதங்களில் உள்துறை செயலாளர் வகுக்க வேண்டும். அல்லது ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்றனர்.-------கொடைக்கானல் 'மாஸ்டர் பிளான்'இறுதியாவது எப்போதுகொடைக்கானலில் சில கட்டடங்களுக்கு அங்கீகாரம் இல்லை; விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக்கூறி அரசுத் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சிலர்,'கொடைக்கானலுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்ட 'மாஸ்டர் பிளான்'கொண்டுவரப்படும். இதன்படி 1993 ல் கொண்டுவரப்பட்டது. அதன்பின் நடவடிக்கை இல்லை. மாஸ்டர் பிளான் வந்தால்தான் குடியிருப்பு, வணிக கட்டடங்களை வகைப்படுத்தி விதிமீறல் உள்ளதா? என உறுதி செய்ய முடியும். மாற்றியமைக்கப்பட்ட 'மாஸ்டர் பிளானுக்கு அரசு அங்கீகாரம் அளித்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதுவரை விதிமீறல் உள்ளது எனக்கூறி கட்டடங்களை அகற்ற அல்லது சீல் வைக்க தடை விதிக்க வேண்டும்,'என மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆஜராகி, ''கொடைக்கானலில் தற்போதைய நீர்வரத்து, சுற்றுலா வளர்ச்சி உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாஸ்டர் பிளானை மாற்றியமைக்க சட்டரீதியாக காலவரம்பு எதுவும் இல்லை. மாஸ்டர் பிளான் 3 மாதங்களில் இறுதி செய்யப்படும்,'' என்றார். நீதிபதிகள், 'மாஸ்டர் பிளானை நடைமுறைப்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் டிச.,19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.----------அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்திருநெல்வேலி கணேசன் தாக்கல் செய்த மனு: தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவில்லை. திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கணேசன் குறிப்பிட்டார். நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. கலெக்டர் ஷில்பா ஆஜரானார். மனுதாரர் வழக்கறிஞர், 'ஆற்று புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நடவடிக்கை இல்லை,''என்றார்.அரசு வழக்கறிஞர்,''இது தவறு. பட்டா நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது,''என்றார்.நீதிபதிகள்,'அருகிலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து டிச.,19 ல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X