| வெளிச்சம் தேடும் பயணம் Dinamalar
வெளிச்சம் தேடும் பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:21

சிவகங்கை:சிவகங்கையில் ஒளி தர மறுக்கும் தெருவிளக்குகளால், இரவில் வழிப்பறி, திருட்டு அதிகரிக்கின்றன. நிதி, ஊழியர் தட்டுப்பாட்டால் விளக்குகளை இயக்க தவிர்ப்பதாக புகார் எழுந்துள்ளது.மாவட்டத்தில் முதல்நிலை அந்தஸ்து பெற்றது சிவகங்கை நகராட்சி. இங்குள்ள 27 வார்டுகளில் உள்ள தெருக்கள், மதுரை - தொண்டி, திருப்புத்துார் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டியது நகராட்சியின் கடமை. ஏற்கனவே போதிய தெருவிளக்கு வசதி இல்லாத நிலையில் ஒயர்மேன், உதவியாளர்கள் பற்றாக்குறை, நிதி தட்டுப்பாட்டால் பொருட்கள் வாங்க முடியாமல் நகராட்சி திணறுதல் போன்ற காரணத்தால் தெருவிளக்கு பராமரிப்பு சரியாக நடப்பதில்லை.குறிப்பாக நகரை அழகுபடுத்தும் நோக்கில் அரண்மனை வாசல், மதுரை முக்கு, சிவகங்கை - மானாமதுரை பைபாஸ் சந்திப்பு, இளையான்குடி ரோடு உட்பட 10 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் (ைஹமாஸ் லைட்) பொருத்தியுள்ளனர். இதில் மட்டுமே 108 பல்புகள் பொருத்தியுள்ளனர். இது தவிர தெருக்கள், முக்கிய வீதிகளில் உள்ள விளக்குகள் அனைத்தும் தினமும் முழுமையாக எரிவதில்லை. குறிப்பாக சிவகங்கை - தொண்டி ரோடு மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பாலத்தின் மீதுள்ள மின்விளக்குகள் கூட இரவில் எரியாமல் பாலமே இருளில் மூழ்கிகிடக்கிறது. இது போன்ற காரணத்தால் பாலத்தில் செல்வோர் விபத்திற்கு உள்ளாகின்றனர். தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியும் அதிகரிக்கின்றன. நகராட்சி நிர்வாகம் மின் ஊழியர் பற்றாக்குறையை போக்கி, இரவில் அனைத்து விளக்குகளும் வெளிச்சம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இங்கு தலா 2 ஒயர்மேன், உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் சரியாக தெருவிளக்குகளை இயக்குவதில்லை என புகார் வந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பால மின்விளக்கு பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது, என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X