பள்ளி சீருடைகளை சுமந்த தலைமையாசிரியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:30

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை பெற தலைமையாசிரியர்கள் மீண்டும் அலைக்கழிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவற்றை உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்,மற்றும் எஸ்.எஸ்.ஏ.,அலுவலகங்களுக்கு நேரில் வந்து தலைமையாசிரியர்கள் பெற்று செல்கின்றனர்.இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதோடு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இது குறித்து எழுந்த புகாரை தொடர்ந்தும், இப்பொருட்கள் விரைவாகவும், குறித்த காலத்திலும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவற்றை கல்வித்துறையே நேரிடையாக பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. இதற்கான நிதியும் கல்வித்துறையால் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிங்கம்புணரியில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள எஸ்.எஸ்.ஏ.,அலுவலகத்தில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. இதை பள்ளி களுக்கு சென்று நேரிடையாக வழங்காமல் தலைமையாசிரியர்களே வந்து பைகளில் கட்டி எடுத்து சென்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர்களை கல்வி பணி தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்களை சீருடைகளை சுமக்க கல்வித்துறை பயன்படுத்துவது நீதிமன்ற உத்தரவிற்கு புறம்பானதாகும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். வருங்காலங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும், என்றனர்.வட்டார கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் மட்டுமே பள்ளியில் நேரிடையாக வழங்கப்படும். சீருடைகளை ஆசிரியர்கள் தான் வந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X