| சேறும் சகதியுமாக மாறிய மார்க்கெட்: பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிப்பு Dinamalar
சேறும் சகதியுமாக மாறிய மார்க்கெட்: பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:58

ஒட்டன்சத்திரம்:மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறும், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள் சுகாதார சீர்கேடால் பாதிக்கப்படுகின்றனர்.



ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், மாநிலத்தில் உள்ள பெரிய மார்க்கெட்களில் ஒன்று. இங்கு உள்ளூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களில் விளையும் காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இங்கு 140 க்கும் மேற்பட்ட கமிஷன் கடைகள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மழைக் காலத்தில் மார்க்கெட் வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.



இதற்கு முக்கிய காரணம் வளாகத்திற்குள் கொட்டப்படும் காய்கறி கழிவுகள் தான். இவற்றை தினமும் அப்புறப்படுத்த முடிவதில்லை.வார விடுமுறை நாளான சனிக்கிழமைதான் குப்பைக் கழிவுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதுவரை சேறும் சகதியுமான இடத்தில்தான் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பொதுமக்களும் இதில்தான் நடமாடுகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூடைகளை இறக்கி வைப்பதும், விற்பனையான காய்கறி மூடைகளை லாரிகளில் ஏற்றுவதும் இவர்கள்தான்.



இவர்கள் சேற்றில் நடந்து செல்வதால் சேற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.இங்கு காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுத்தால், இப்பிரச்னையில் இருந்து ஓரளவிற்கு விடிவு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X