| உருக்குலைந்த ரோட்டினால்வளவிசெட்டிபட்டியில் அவதி Dinamalar
உருக்குலைந்த ரோட்டினால்வளவிசெட்டிபட்டியில் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:59

வடமதுரை:வளவிசெட்டிபட்டி - நடுவனுார் ரோடு உருக்குலைந்து வருவதால் பல கிராம மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.



அய்யலுார் அடுத்த வளவிசெட்டிபட்டியில் இருந்து நடுவனுார், மலைப்பட்டி வழியே எரியோடு அருகே ஒத்தக்கடை மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரோடு உள்ளது. மொத்தம் 11 கி.மீ., துாரமுள்ள இப்பாதையில் பெரும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 4 ஊராட்சி மக்கள் பயன்படுத்தும் ரோட்டை தார் ரோடாக அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வலியுறுத்தியது.



இதன் பலனாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை மூலம் தார் ரோடாக மாற்றப்பட்டது. ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழை நீர் பாய்ந்ததால் நடுவனுார் வரை தார்ரோடு அதிக சேதமுற்று கற்களாக பெயர்ந்து கிடக்கிறது. இவ்வழியை பயன்படுத்த கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். வனத்துறை ரோடு என்பதால் குறிப்பிட்ட காலமுறையில் புதுப்பிக்காமல் இழுபறி நிலை உள்ளது. ரோட்டை புதுப்பிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X