கொடைக்கானலில் 'களையிழந்த' கலையரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:03

கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சி கலையரங்கம் சேதமடைந்து பயன்பாடின்றி சமூகவிரோதிகளின் கூடாரமாக உருமாறியுள்ளது.சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலில் 1979 ல் சினிமா தியேட்டராக செயல்பட்ட கட்டடம், கலையரங்கமாக செயல்பாட்டிற்கு வந்தது.



15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கலையரங்கத்தில் உள்ளுர் விழாக்கள், கூட்டங்கள் நடத்தியதன்மூலம் நகராட்சிக்கு கணிசமான வருவாய் ஈட்டி தந்தது. நாளடைவில் பெருகிய கூட்ட அரங்குகள், விடுதிகளின் வரவால் இதற்கு மவுசு குறைந்தது.அதன்பின், இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.



சுவர்களில் விரிசல், மேற்கூரை சேதம் என பொலிவிழந்தது. அதன்பின், தனிமைப்படுத்தப்பட்ட இக்கட்டடத்தில் சமூகவிரோத கும்பல்கள் கொட்டமடிக்கின்றனர். குடிமகன்கள் பாராகவும், 'பலான' வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.இதனால் கலையரங்கத்தின் மாண்பே சீர்குலைந்து போனது. குடிமகன்கள் விட்டுச் செல்லும் மது பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், இயற்கை கழிவுகள் என சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது.



சில ஆண்டுகளுக்கு முன் கலையரங்க சீரமைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கு, நகராட்சி நிர்வாகம் சில கோடிகளை ஒதுக்கியது. ஆனால் பெயரளவுக்கே பணிகள் நடந்தன. அதுவும் தரமற்ற கட்டுமானம், முழுமை பெறாத பணிகள் என அரை, குறை நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.இதுகுறித்து ஆய்வு, விசாரணை நடந்தால் பலனடநை்தோர் சிக்க வாய்ப்புள்ளது.



வசதி படைத்தவர்கள் தனியார் அரங்கு, விடுதிகளை பயன்படுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் உள்ள இதனை பராமரித்தால் பாமர மக்கள் பயன்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் நகராட்சி கலையரங்கத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X