| அரசு வக்கீல் பதவியால் அதிருப்தி Dinamalar
அரசு வக்கீல் பதவியால் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:11

கோவை;மத்திய அரசு வக்கீல் பதவியை, கடந்த நான்கரை ஆண்டுகளாக, மாற்று கட்சியினருக்கு பா.ஜ., விட்டு கொடுத்துள்ளதாக, பா.ஜ., வக்கீல்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.

நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக, ஆளும் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, கோவையில், மாஜிஸ்திரேட் கோர்ட் தவிர மற்ற நீதிமன்றங்களில், 20க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வக்கீல்களுக்கு, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


போதை பொருள் கடத்தல், தபால்துறை, ரயில்வே துறை, தொலை தொடர்பு துறை, சுங்கத்துறை போன்ற மத்திய அரசு துறை சார்ந்த வழக்குளில் ஆஜராக, அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர்.2009ல் காங்., ஆட்சியின் போது, கூட்டணி கட்சியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர்.2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்பும், பா. ஜ.,வை சேர்ந்த வக்கீல்களுக்கு, அரசு வக்கீல் பொறுப்பு வழங்கப்படவில்லை. காங்.,ஆட்சியின் போது, நியமிக்கப்

பட்டவர்களே தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.


இதனால், பா.ஜ., மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மீது, வக்கீல்கள் அதிருப்தியாக உள்ளனர்.

'மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே, ஆளும் கட்சியினர் அரசு வக்கீலாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், இங்கு கட்சிக்கு உழைத்த வக்கீல்களுக்கு, மத்திய அரசு வக்கீல் பொறுப்பு கொடுக்காமல், மாற்று கட்சியினருக்கு தாரை வார்த்துள்ளது வேதனையளிக்கிறது. தேர்தல் வரும் போது, அதன் பாதிப்பு தெரியவரும்' என்று குமுறுகின்றனர் அவர்கள்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X