ஒரு போன் போதுமே: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:13

நடவடிக்கை வேண்டும்



வேடசந்தூர் 6வது வார்டு நாடார் தெருவில் சாக்கடை கால்வாய்கள் துார்வாரவில்லை. இதனால் கழிவுநீர் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-லட்சுமி, நாடார் தெரு, வேடசந்துார்



போக்குவரத்து நெரிசல்



வத்தலக்குண்டு போஸ்ட் ஆபீஸ் ரோடு வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்தது. அங்கு சாலையில் ஆட்டோக்கள், டூவீலர்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-கிருஷ்ணமூர்த்தி, வத்தலக்குண்டு



கழிவுநீர் தேக்கம்



நிலக்கோட்டை பள்ளப்பட்டி கிராமம் கள்ளர்தெருவில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தவமணி, கள்ளர்தெரு, பள்ளப்பட்டி



ஆக்கிரமிப்பு அவதி



குஜிலியம்பாறை மருதை காளியம்மன் கோயில் தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. வீடுகள், ெஷட்களை தெருவில் கட்டியும், வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிக்கின்றனர். அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-எம்.ஜி.ஆர்., மூர்த்தி, குஜிலியம்பாறை.



மாணவர்கள் அவதி



வேடசந்துார் தாலுகா புளியமத்துக்கோட்டை - காசிபாளையம் இடையே பள்ளி நேரத்திலும் பஸ்கள் இல்லை. மாணவர்களுக்கும் பஸ்பாஸ் இல்லை. இதனால் பல மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் 2 பஸ்களில் மாறி மாறி சென்று படிக்க அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-முருகன், புளியமரத்துக்கோட்டை



நாய்களை பிடிப்பராதிண்டுக்கல் நாகராட்சியில் ரவுண்டானா பகுதியில் ஏராளமான நாய்கள் பல மாதங்களாக சுற்றித் திரிகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. யாரையாவது கடித்து ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டால்தான் விடிவு கிடைக்குமோ என தெரியவில்லை. மாவட்ட நிர்வாகமாவது இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-விஸ்வநாதன், திண்டுக்கல்.



கும்மிருட்டில் தவிப்பு



திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் கும்மிருட்டு பாதையில் திருட்டு பயத்துடனே பயணிகள் செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-குமார், நாகல்நகர்



தடுப்புச்சுவர் தேவை



தருமத்துப்பட்டியில் இருந்து பன்றிமலை செல்லும் மலைப்பாதையில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. பள்ளத்தாக்கு பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது. நெடுஞ்சாலை துறை கவனிக்க வேண்டும்.


-முத்துச்செல்வம், தருமத்துப்பட்டி

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X