வடமதுரை:வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுக்காம்பட்டி பகுதி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.சுக்காம்பட்டி ஊராட்சி எஸ்.குரும்பபட்டியில் பூலாங்குளத்தை ஊரக வேலையுறுதி திட்டத்தின் கீழ் ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த அக்டோபரில் மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் மருதை தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனையடுத்து பூலாங்குளத்தில் துார் வாரும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பணி துவங்கி 250 பேர் நவ.1 முதல் பணி செய்தனர். பணித்தள பொறுப்பாளராக மருதை நியமிக்கப்பட்டார். மருதையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த அதிகாரிகள் பெண் ஒருவரை புதிய பொறுப்பாளராக நியமித்தனர். இதில் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் 250 பேர், மருதை தலைமையில் வடமதுரை ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். இதனையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில், பணித்தள பொறுப்பாளராக மருதையே நீடிப்பது, குறித்த நேரத்திற்கு தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும். வளவிசெட்டிபட்டி பகுதி தொழிலாளர்களும் இதே குளத்தில் பணி செய்வது' என முடிவானது. இதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.