| ரயில் சேவையில் மாற்றம் Dinamalar
ரயில் சேவையில் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:15

வடமதுரை:திருநெல்வேலி -- மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்று முதல் டிச.31 வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் திருச்சியுடன் திரும்புகிறது.பூதலுார்- தஞ்சாவூர் இடையே நடக்கும் பராமரிப்பு பணியால், திருநெல்வேலி -- மயிலாடுதுறை (வண்டி எண்:56822/56821) பயணிகள் ரயில் இன்று முதல் டிச.31 வரை ஞாயிறு தவிர்த்த நாட்களில் திருச்சி -தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.இதனால் திருநெல்வேலியில் இருந்து காலை 11:30 மணிக்கு வடமதுரையில் நின்று செல்லும் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் திருச்சியுடன் நிறுத்தப்படும். திருச்சியில் மறுமார்க்க ரயிலாக மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:18 மணிக்கு வடமதுரை வந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X