| விலையிருந்தும் விளைச்சல் இல்லை வெண்டை விவசாயிகள் பாதிப்பு Dinamalar
விலையிருந்தும் விளைச்சல் இல்லை வெண்டை விவசாயிகள் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:20

பழநி:பழநி பகுதியில் வெண்டைக்காய்க்கு நல்லவிலை கிடைத்த போதும், எதிர்பார்த்த விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பழநி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பாலசமுத்திரம் பகுதிகளில் கத்தரி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிகள் ஆண்டுமுழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் பூக்கள் பூத்து, காய்க்கும்தறுவாயில் உள்ளது. அதேசமயம் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூச்சி, புழுக்கள் தாக்குதலால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ ரூ.15 என விலை கிடைத்தாலும் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்திரப்பட்டி விவசாயி கார்த்திகேயன் கூறுகையில், ''ஒரு ஏக்கரில் வெண்டை சாகுபடி செய்துள்ளேன். பூச்சி, தாக்குதால் விளைச்சல் பாதித்துள்ளது. தினமும் 7 மூடை கிடைக்க வேண்டிய இடத்தில் மூன்று மூடைதான் கிடைக்கிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 8க்கு போனது. தற்போது ரூ.15 ஆக விலை உயர்ந்துள்ளது, இருப்பினும் மகசூல் குறைவாலும், விதை, மருந்து, உரம் மற்றும் ஆட்கள் காய்பறிப்பு, ஏற்றுக்கூலிபோக எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால் வெண்டை சாகுபடி ஏமாற்றத்தை தந்துள்ளது'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X