| வேளாண் மாணவிகள்நடத்திய கண்காட்சி Dinamalar
வேளாண் மாணவிகள்நடத்திய கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:24

ஒட்டன்சத்திரம்,:ஒட்டன்சத்திரத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் விவசாய கண்காட்சி நடந்தது.மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்சி., இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டன்சத்திரம் குழுவினர் தீபிகா சண்முகம், தீபிகா செல்லதுரை, எம்.கே. தீபிகா, தேவதர்ஷினி, தரன்யா, திவ்ய பாரதி, திவ்யா, திவ்ய தர்ஷினி ஆகியோர் தாங்கள் கற்ற அனுபவத்தை தெரியப்படுத்தும் வகையில் விவசாய கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். கல்லுாரி முதல்வர் சுரேஷ் துவக்கி வைத்தார். இதில் படைப்புழு தாக்குதல் பற்றிய வரைபடங்கள், கோழி பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, புகையிலை பதப்படுத்துதல் உட்பட பல தலைப்புகளில் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X