| பெண் வீட்டாரை தாக்கியோர் மீது வழக்கு Dinamalar
பெண் வீட்டாரை தாக்கியோர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:25

ஒட்டன்சத்திரம்:ஆத்துார் தாலுகா, சேடபட்டியைச் சேர்ந்த ராஜசேகருக்கும், 25, உமாமகேஸ்வரிக்கும், 21, சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சீர்வரிசையாக 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் அதிகமாக சீர்வரிசை வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டு, கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் செய்துள்ளனர்.



ராஜசேகரும் தன்வீட்டார் சொல்படி நடந்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது தாய், சித்தியுடன் மாமியார் வீட்டிற்கு சென்று உமாமகேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது மாப்பிள்ளை வீட்டார் மூவரையும் தாக்கி காயப்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் கணவர் ராஜசேகர், 25, மாமானார் கணேசன், மாமியார் ஜெயலட்சுமி, உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X