| சோப்பாக மாறிய அலைபேசி Dinamalar
சோப்பாக மாறிய அலைபேசி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:27

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பொன்னகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், புதிதாக அலைபேசி வாங்க, 'ஆன்லைன்' நிறுவனத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு ஆர்டர் செய்தார். அந்நிறுவன விற்பனை பிரதிநிதி வந்து அலைபேசி பார்சலை கொடுத்தார்.பணத்தை கொடுத்துவிட்டு, பார்சலை பிரித்த போது அதில் அலைபேசிக்கு பதில் சலவை சோப்பு இருந்தது. உடனே விற்பனை பிரதிநிதியை மடக்கி, போலீசில் புகார் தெரிவிப்பேன் என வாலிபர் எச்சரித்தார். இதனால் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு விற்பனை பிரதிநிதி சென்றார். இந்த சம்பவம் 'வாட்ஸ்ஆப்' போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X