| பழகுநர் சான்றிதழ் வழங்கல் Dinamalar
பழகுநர் சான்றிதழ் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:27

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மலைவாழ் மக்களுக்கு ஓட்டுனர் பழகுநர் சான்றிதழ் வழங்கப்பட்டது.தமிழக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி உத்தரவில் கலெக்டர் டி.ஜி.வினய், இணைபோக்குவரத்து ஆணையர் ஜெய்சங்கர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், வாகன ஆய்வாளர் தருமானந்தன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தில் வழங்கினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல் ஒழிப்பு போலீசார் உதவியுடன் கடுகுதடியில் 30, அடுக்கத்தில் 40, மணத்தேவில் 33 பேருக்கு சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு ஏற்படுத்தி ஓட்டுனர் பழகுனர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X