| இதையும் கவனிங்க சார் Dinamalar
இதையும் கவனிங்க சார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:30

சிவகாசி:மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் மின்சார தேவைக்காக கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் உயர் அழுத்த மின் ஒயர் செல்ல குடியிருப்பு பகுதி, போக்குவரத்து நிறைந்த ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இவைகளில் பெரும்பான்மையானவை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. இவைகள் பெரும்பாலும் சேதமடைந்து விட்டன. பல இடங்களில் கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற் கிறது பல ஆண்டுகள் ஆகி விட்டதால் மின்கம்பங்கள் பல மண் அரிப்பால் சேதமடைந்துள்ளது. மழை மற்றும் அதிகமாக காற்றடிக்கும் போது சேதமடைந்த மின்கம்பங்கள் கீழே விழுகின்றன. 'டிரான்ஸ்பார்மர்' உள்ள மின் இணை கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பளை அசம்பாவிதம் ஏற்படும் முன் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மின்கம்பம் சாய்ந்து விழுந்த பின்னரே நடவடிக்கை எடுக்கின்றனர். அதை சரி செய்யும் வரை குடியிருப்புவாசிகள் மின்தடையால் அவதிப்பட வேண்டியுள்ளது. சிவகாசி சார்பு நீதிமன்றம் அருகே ரோட்டின் ஓரத்திலேயே முற்றிலும் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் உள் ளன. நகரில் அதிக போக்குவரத்து நிறைந்த இப்பகுதியினை அச்சத்துடனே கடக்க வேண்டியுள் ளது.


நடவடிக்கை எடுக்கலாம்மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் தற்போது சேதமடைந்துள்ளது. இவைகள் மழைக்கோ, அதிக காற்றுக்கோ தாங்காது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சேதமடைந்திருந்தால் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மின்கம்பம் விழுந்த பின்னரே இதை மாற்றுகின்றனர்.ராஜா அப்துல்காதர், சமூக ஆர்வலர், சிவகாசி.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X