மழை நீரில் மிதக்கும் வழுதூர் குடியிருப்புகள்: மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:39

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வழுதுார் பகுதியில் மழை நீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள்

தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

வழுதுாரில் உள்ள ஊரணி உட்பட அனைத்து நீர் நிலைகளும் மழையால் நிரம்பியுள்ளன. மழை நீர் செல்ல வடிகால் வசதி இல்லை. வாறுகால்கள் துார்ந்து போனதாலும், பல இடங்களில்

ஆக்கிரமித்து கட்டடங்கள் உள்ளதாலும் மழை நீர்

வடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.

மழை நீர் தேங்கி ஒரு மாதத்திற்கும் மேல்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. குழந்தைகள் விளையாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் நிலை உள்ளது. உள்ளாட்சி

நிர்வாகங்கள் நவடிக்கை எடுத்து, குடியிருப்பு

களுக்குள் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்.

-

எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

முதுகுளத்துார்-கமுதி ரோட்டில் ரோட்டை தாழ்வான பகுதியில் பள்ளி இருப்பதால் மழைக் காலங்களில் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி குளம் போல் தேங்குகிறது. தண்ணீரில் மாணவர்கள் செல்லும் போது விழுந்து காயம் அடைகின்றனர்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் ஏற்கனவே படத்துடன் செய்தி வெளியானது. எனவே, பள்ளி வளாகத்தில் எமிசென்ட் மணல் நிரப்ப வேண்டும் என்று முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டியிடம் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி கோரிக்கை வைத்தார். தேசிய பசுமைப்படை ஆசிரியர் மங்களநாதன் உடன் இருந்தார்.

எம்.எல்.ஏ., பாண்டியிடம் கேட்டபோது, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எமிசென்ட் மணல் அடித்து பின் கிராவல் பரப்பி சரிசெய்து

தருவதாக கூறினார்.உடனடியாக வேலையை துவங்க தொகுதி மேம்பாட்டு குழுவிற்கு உத்தரவிட்டார்.

-

இறப்பு நிவாரணம்

வழங்க கோரி மனு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காமராஜபுரத்தை சேர்ந்தவர் குணா,38. நவ.,14ல் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தார். டாக்டர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளார். இவரது இறப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி முதுகுளத்துார் தாசில்தார் மீனாட்சியிடம் குணாவின் தந்தை ஹரிதாஸ் மனு கொடுத்தார்.

ஹரிதாஸ் கூறுகையில், குணா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்துார் அரசு மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்ற பிறகும் மூச்சுத்திணறல் மட்டும் குறையாததால் மேல்சிகிச்சைகாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு சென்றபின் இரண்டு மணி நேரம்

அங்கும், இங்கும் அலைய வைத்ததனர். நர்ஸ்சுகளிடம் கேட்ட போது டாக்டர்கள் வந்தாலும் வராலாம், வராமல் அப்படியே போய்டலாம், என்றனர். இதனால் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையிலும், பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பன்றி காய்ச்சல் இருப்பதாக கூறினர். பின் குணா இறந்தார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியில் இருந்திருந்தால் குணா இறந்திருக்க மாட்டார். எனவே குணா இறப்பிற்கு டாக்டர் பணியில் இல்லாததே காரணம்,என்றார்.

ஏழை விவசாயி குணாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மனைவி, வயதான தாய், தந்தை உள்ளனர்.

எனவே, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து

20 லட்ச ரூபாய் நிதி வழங்கவும், குணா

மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் அரசு

நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X