| அரியக்குடியில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் Dinamalar
அரியக்குடியில் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:41

ராமநாதபுரம்:போகலுார் வட்டார வேளாண் துறை சார்பில் அரியகுடியில் கிரிஷ்

கல்யாண் அபியான் என்ற விவசாயிகள் நல்வாழ்வு இயக்க நிகழ்ச்சி நடந்தது.

வேளாண் துறை

திட்டங்கள், கூட்டுப் பண்ணையம், உணவு பயிர்களை சந்தைப் படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை இருமடங் காக்கும் தொழில்நுட்பம் மற்றும் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, சிறுதானியங்களின் சாகுபடி, தரமான விதை உற்பத்தி, மானாவாரி இயக்கம் உள்ளிட்டவை பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் விளக்கினார்.

பண்ணை இயந்திரங்கள் பராமரிப்பு, பண்ணை குட்டை அமைத்தல், நுண்ணீர் பாசனம் மற்றும் சூரிய ஒளியினால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்தல் உள்ளிட்டவை பற்றி வேளாண் உதவி பொறியாளர் விளக்கினார்.

வட்டார தொழில் நுட்ப மேலாளர், உழவன் செயலியின் நன்மைகள் மற்றும் எலி ஒழிப்பு முறைகள் பற்றி கூறினார். வேளாண்மை வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன் கூட்டுப்பண்ணையம் பற்றி விரிவாக கூறினார்.

கலந்து கொண்ட

விவசாயிகளுக்கு மண்வள அட்டை, வேளாண் இடுபொருட்கள் மற்றும் காய்கறி விதைகள்

வினியோகம் செய்யப்

பட்டது. போகலுார் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X