| ஸ்ரீவி.,யில் மனநோயாளிகள் மீட்பு : சட்டபணிகள் ஆணைக்குழு நடவடிக்கை Dinamalar
ஸ்ரீவி.,யில் மனநோயாளிகள் மீட்பு : சட்டபணிகள் ஆணைக்குழு நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:44

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையால் ஸ்ரீவில்லிபுத்துாரில் சுற்றி திரிந்த 15 மனநோயாளிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கபட் டனர்.மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் மனநலம் பாதிக்கபட்டவர்கள் ஆங்காங்கே எவ்வித உதவியுமின்றி தவித்து வந்தனர்.


மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் முத்துசாரதா, செயலர் கிறிஸ்டல்பபிதா நடவடிக்கையால் மனநலம் பாதிக்கபட்டவர்களை மீட்டு தக்க உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந் தனர்.அதன்படி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ,துறை அலுவலர்கள், மாவட்ட மனநலக்குழு டாக்டர் இளவரசி, ஸ்ரீவி., தாலுகா வருவாய் ஆய்வாளர் பால்துரை, வி.ஏ.ஓ.,ஆறுமுககுருசாமி, ஈஞ்சார் ஜீவக்கல் காப்பக நிர்வாகி பாண்டியன், இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் ,ஸ்ரீவில்லிபுத்துார் கிரீன் ரோட்டரி நிர்வாகிகள் ராஜசேகர், ஆனந்தகுமார், சண்முகநாதன் கொண்ட குழுவினர் ஆண்டாள் கோயில், ரதவீதிகள், மாரியம்மன்கோயில், திருவண்ணா மலை பகுதிகளில் ஆய்வு நடத்தி 9 ஆண், 6பெண் மனநோயாளிகளை மீட்டு சிவகாசி ஜீவக்கல் பாதுகாப்பகத்தில் சேர்த் தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X