மழைப்பொழிவு குறைந்ததால் சாலிமரங்களை அகற்ற வலியுறுத்தல்: வனவிலங்குகளுக்கு தீவனம் கிடைப்பதாக வனத்துறை விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:44

தேவாரம்:தேனி மாவட்ட வனநிலங்களை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சாலி மரங்களால் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் அவற்றை அகற்ற வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவற்றால் வன விலங்குகளுக்கு தீவனம் கிடைப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக, சில ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறை, ஊராட்சி புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையான பகுதிகளில் முள்மர வகையை சேர்ந்த சாலி வளர்ந்து பரவிக்கிடக்கிறது.அகற்ற வேண்டும்அசோகர் பசுமை இயக்க தலைவர் திருப்பதிவாசகன், அரசுக்கு அனுப்பிய மனு விபரம்:சாலி மரங்கள் சூரிய ஒளி ஊடுருவி செல்ல முடியாத குடை போன்ற அமைப்பை இயற்கையாக பெற்றுள்ளன. இவற்றின் கீழே புல், செடிகள் வளர்வதில்லை. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இடம் பெயர்கின்றன. தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உணவு தேடி தோட்டங்களுக்குள் புகுவதால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இயற்கைக்கு விரோதமான சாலி மரங்களை அகற்றி விட்டு, மேகங்களை ஈர்த்து மழைப் பொழிவை தரும் அரசு, ஆலம், புங்கன், பூவரசு, வேம்பு, பனை கன்றுகளை நடவு செய்யதால் வனவளம் பெருகும், என்று குறிப்பிட்டுள்ளார்.தீவனம்மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''2017-18 ம் ஆண்டில் பெருமளவு மரம் வளர்ப்பு திட்டத்தில் 6 ஆயிரத்து 120, நபார்டு திட்டத்தில் 30 ஆயிரம், சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தில் 2 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகளும் மற்றும் 5 ஆயிரம் பனை விதைக்கப்பட்டுள்ளன. சாலி மரங்கள் வறட்சியை தாங்கி வளரும் முட்புதர் மரங்கள். இவற்றின் இலை, காய்கள் வன விலங்குகளுக்கு உணவாகவும், மண் அரிப்பை தடுக்கவும் பயன்படுகின்றன. இதனால் அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்வணிக ரீதியில் பயன்ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை அலுவலர் மனோகரன் கூறுகையில், ''நாட்டு கருவேலம் வகையை சேர்ந்தது தான் சாலி மரம். இதிலிருந்து வனவிலங்குகளுக்கு அதிகளவில் உணவு கிடைக்க வாய்ப்பில்லை. மண் அரிப்பை தடுக்க வெட்டி வேர் நடவு செய்யலாம். வணிக ரீதியில் நல்ல பயனும் கிடைக்கும்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X