| 'மைக்ரோ கம்போஸ்ட்' கிடங்கிற்கு எதிர்ப்பு: ராஜபாளையத்தில் திரண்ட 60 அடி ரோடு மக்கள் Dinamalar
'மைக்ரோ கம்போஸ்ட்' கிடங்கிற்கு எதிர்ப்பு: ராஜபாளையத்தில் திரண்ட 60 அடி ரோடு மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:46

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் மைக்ரோ கம்போஸ்ட் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 60 அடி ரோடு பகுதியினர் திரண்டனர்.ராஜபாளையம் நகராட்சி சார்பில் குப்பையை தரம்பிரித்து மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆவரம்பட்டி 60 அடி ரோட்டில் ரூ. 36 லட்சம் செலவில் கட்டடம் அமைக்க நகராட்சி சார்பில் இட அளவீடும் நடந்து வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்.


இந்நிலையில் நகராட்சி சார்பில் கட்டடங்கள் கட்ட 60 அடி ரோட்டில் பணிகள் துவக்கினர். இதற்கு எதிராக திரண்ட இப்பகுதி மக்கள் 60 அடி ரோட்டை 20 அடியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என பிளக்ஸ் வைத்துள்ளனர். போலீசார் சமாதானப்படுத்த கலைந்து சென்ற னர்.முதலில் தொட்டி இப்போ கிடங்குஇங்கு குப்பை தொட்டிகளை வைத்த போது எதிர்ப்பு தெரிவித்தோம். சிறிது சிறிதாக துவங்கி 10 தொட்டிகளுக்கு மேல் வைத்து குப்பை கிடங்காக மாற்றி விட் டனர். இதனால் இந்த இடமே துர்நாற்றம் அதிகரித்து விட்டது.


தற்போது நிரந்தர கட்டடம் எழுப்பினால் நிலை மோசமாகி விடும் என்பதால் எதிர்க்கிறோம்.லதா, குடும்பத்தலைவி, 60 அடி ரோடுபல நகராட்சியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை பற்றி ஏற்கனவே விரிவாக எடுத்து கூறி உள்ளோம். வெட்ட வெளியில் இருந்த குப்பை மூடப்பட்ட அறையினுள் துண்டுகளாக்கப்பட்டு, எந்த வித துர்நாற்றமும் இன்றி உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் குப்பை தேங்காத நிலை ஏற்படும். பொது மக்கள் பயப்பட தேவையில்லை.சரவணன், நகராட்சி கமிஷனர், ராஜபாளையம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X