| அடிப்படை வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையம் Dinamalar
அடிப்படை வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:46

தேனி:தேனி அருகே கோவிந்தநகரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.கோவிந்தநகரம் மற்றும் அதை சுற்றியுள்ள அம்பாசமுத்திரம், பாலகிருஷ்ணாபுரம், வெங்கடாசலபுரம், சோலைத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள், கோவிந்தநகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டியுள்ளது. டாக்டர்கள் தங்கும் அறை பாழடைந்து, பாம்பு மற்றும் விஷபூச்சிகளின் புகலிடமாக மாறிவிட்டது. நோயாளிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. மருத்துவமனை கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழு கிறது.பிரசவ வார்டு பயன்பாட்டின்றி பூட்டியே கிடக்கிறது. டாக்டர் முறையாக வருவதும் இல்லை. தொடர்மழையால் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், நர்ஸ்கள் மட்டுமே மருத்து ,மாத்திரை தருகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதார நிலையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X