| ஸ்டாலின் முதல்வராவார் வைகோ நம்பிக்கை Dinamalar
ஸ்டாலின் முதல்வராவார் வைகோ நம்பிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:48

சாத்துார்:''இடைத்தேர்தலில் வென்று ஸ்டாலின் முதல்வராவார்'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நடந்த ம.தி.மு.க. ,வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:கஜா புயல் பாதிப்புக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால் மோடி அரசு வெறும் ரூ.350 கோடி வழங்கி உள்ளது. டெல்டா மாவட்டத்தில் விவசாயம் அழிந்ததால் நியூட்ரினோ, மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் வளங்களை அழித்து விடலாம் என நினைக்கின்றனர். தலித் ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் உள்ளபடி முதலில் மகிழ்ச்சியடைக்கூடியவன் நான்தான். தி.மு.க., தலைமையிலான கூட்டணி 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரியிலோ, நாடாளுமன்ற தேர்தலுடனோ நடந்தாலும் அனைத்திலும் வெற்றி பெறும். ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராவார், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X