| பிளஸ் 1 ஆசிரியர்களுக்கு பயிற்சி Dinamalar
பிளஸ் 1 ஆசிரியர்களுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:48

விருதுநகர்:பிளஸ் 1 வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு குழப்பம் நிலவியது. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியினை ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.விருதுநகர் நோபிள் பெண்கள் கல்லுாரியில் விருதுநகர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும், கிருஷ்ணன் கோயில் வி.பி.எம்.எம்., கல்லுாரியில் சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்துார் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X