| ராமேஸ்வரத்தில் ரூ.1.22 லட்சம் திருட்டு Dinamalar
ராமேஸ்வரத்தில் ரூ.1.22 லட்சம் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:51

ராமேஸ்வரம்:ராமஸ்வரத்தில் வீட்டின் கதவை உடைந்து 1.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகளை திருடிச் சென்றனர்.

ராமேஸ்வரம் பாரதி நகரில் சிங்கராஜ்,38, மனைவி, குழந்தையுடன் வசிக்கிறார். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தேனி சென்றார். பின் நேற்று வீட்டுக்கு வந்த சிங்கராஜ், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 கிராம் தங்க செயினை திருடர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. ராமேஸ்வரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இரண்டு அல்லது மூன்று பேர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து வீடு கதவு, பீரோவில் கைரேகையை பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திட்ட இயக்குநர் ஆய்வு

கமுதி, டிச. 7 -

கமுதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி ஆய்வு செய்தார்.

கமுதி அருகே வெள்ளாங்குளம், டி.குமாரபுரம், பெருநாழி, பாப்புரெட்டியாபட்டி, முத்துசெல்லாபுரம் ஆகிய கிராமங்களில் நடந்து வரும் நுாறு நாள் வேலைத்திட்டம், தனிநபர் கழிப்பறை, மெட்டல் ரோடு, பசுமை வீடுகள், பாரத பிரதமரின் இலவச தொகுப்பு வீடுகள், பள்ளி காம்பவுண்ட் சுவர் ஆகிய பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தங்கபாண்டியன், வீரராகவன் (ஊராட்சிகள்), பொறியாளர்கள் பிரதீப், வீரசேகர், மேற்பார்வையாளர் சாதிக்பாட்சா, தனிநபர் கழிப்பறை ஒருங்கிணைப்பாளர் சாந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரபாண்டி, சந்திரசேகர் உட்பட பலர் இருந்தனர்.

சிவசேனா ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்,டிச.7-

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி ராமேஸ்வரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சதீஸ் தலைமையில் ஏராளமானோர். பின் தபால் அலுவலகத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பினர்.


 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X