ராமநாதபுரம்: பாகிஸ்தான் காராச்சி ஜோதிர் பஜாரை சேர்ந்தவர் முகமது யூனிஸ்,67. இவர் ஏர்வாடி பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, இலங்கை செல்ல முயன்ற போது 2017 ஜூலை 23ல் ஏர்வாடி போலீசார் இவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் 2 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அப்போது இவர் தரப்பில் வாதாட வக்கீல் இல்லாத நிலையில், மாஜிஸ்திரேட் இசக்கியப்பன் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்தார்.
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வி.ராமலிங்கம் பாகிஸ்தான் முதியவருக்கு இலவச சட்ட
உதவியாக கே.குண
சேகரன் என்ற வக்கீலை நியமித்தார். தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாகிஸ்தான் துாதரகத்திற்கு தெரிவித்து சிறையில் இருப்பது
உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
விசாரணை: இந்த
வழக்கில் புழல் சிறையில் இருந்து ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்த முதியவர் முகமது யூனிைஸ சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வி.ராமலிங்கம் விசாரித்தார். வழக்கு முடிந்த பின் தனது சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை விடுத்தார்.
அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், அவர் வளர்ந்தது அனைத்தும் இலங்கையில், என்றும் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி இந்தியாவிற்குள் வந்ததால், மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருந்தால், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உதவி செய்யப்படும் என்று செயலாளர் வி.ராமலிங்கம் தெரிவித்தார்.