| முல்லைப்பெரியாற்றில் மணல் கடத்தல் 'ஜரூர்' Dinamalar
முல்லைப்பெரியாற்றில் மணல் கடத்தல் 'ஜரூர்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:54

கம்பம்:முல்லைப்பெரியாற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.மழையால் முல்லைப் பெரியாற்றில் கடந்த சில மாதங்களாக கூடுதல்தண்ணீர் வருவதால் மணல் செறிவு ஏற்பட்டுள் ளது. கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி சுருளிப்பட்டி,நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆற்றில் மணல் அள்ளி கடத்தும் கும்பலின் நடவடிக்கைதீவிரமாகியுள்ளது. குறிப்பாக இரவில் சாக்குகளில் மணல் அள்ளி கரையில் குவித்து வருகின்ற னர்,.அதனை பின்னர் டிராக்டர்களில் கொண்டு சென்று குறிப்பிட்ட இடங்களில் கொட்டி விற்பனை செய்கின்றனர். இந்த மணலுக்கு, பிரிமியம் என பெயரிட்டு கட்டட பணிக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இக்கும்பலின் நடவடிக்கையால் ஆற்றில் பள்ளம் உருவாகி தண்ணீர் திசைமாறும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்ற புகார் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X