ரேஷன் கடைகளில் துர்நாற்ற அரிசி வாங்க மறுத்ததால் திரும்ப பெற முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:55

சிவகங்கை:சிவகங்கை ரேஷன்கடைகளில் பழுத்து போன துர்நாற்ற அரிசி வினியோகிக்கப்பட்டது. கார்டுதாரர்கள் வாங்க மறுத்ததால் திரும்ப பெற அதிகாரிகள் முடிவு செய்தனர்.சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கம் (பாம்கோ) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் அரிசியை கொள்முதல் செய்து ரேஷன்கடைகளுக்கு வினியோகித்து வருகிறது. இம்மாதம் சிவகங்கை பகுதி ரேஷன்கடைகளில் வினியோகித்த அரிசி பழுப்பாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தது.


அதனை வாங்க, கார்டுதாரர்கள் மறுத்தனர். இதனால் கடைகளிலேயே அரிசி தேக்கமடைந்தது. மேலும் ரேஷன்கடை ஊழியர்களிடம் கார்டுதாரர்கள் பிரச்னை செய்தனர். இதையடுத்து அரிசி மூடைகளை திரும்ப பெற அதிகாரிகள் முடிவு செய்தனர்.சிவகங்கை காயத்ரி கூறுகையில், ''இலவச ரேஷன் அரிசி ஏழை மக்களுக்கு உபயோகமாக உள்ளது. இம்மாதம் பழுப்பு நிறைந்த அரிசியை வழங்கினார். துர்நாற்றமும் வீசியதால் வாங்க மறுத்துவிட்டோம். உடனடியாக நல்ல அரிசியை வினியோகிக்க வேண்டும்,'' என்றார்.இதேபோல் கடைகளில் அடிக்கடி தரம் குறைந்த அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அவற்றை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X