| பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள், படகுகள் Dinamalar
பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள், படகுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:56

ராமேஸ்வரம்;ராமேஸ்வரம் அருகே 22 நாட்களுக்கு பிறகு நேற்று பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறந்ததும் மூன்று கப்பல்கள், 12 ஆழ்கடல் படகுகள் கடந்து சென்றன.சென்னை செல்ல நவ.,13ல் பாம்பன் கடற்கரைக்கு வந்த 12 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், புயல், சூறாவளி காற்றினால் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த 22 நாட்களாக பாம்பன் கடலில் படகுடன் உணவு, அன்றாட செலவுக்கு பணமின்றி 55 மீனவர்கள் காத்திருந்தனர்.நேற்று ரயில்வே துாக்கு பாலம் திறக்கப்பட்டது. 12 படகுகளும் வரிசையாக சென்னை சென்றன. ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடலை ஆழப்படுத்திய கப்பல், பாலத்தை கடந்து கோழிக்கோடு துறைமுகம் சென்றது. மேலும் கொச்சி, கொல்லத்தில் இருந்து புறப்பட்ட இழுவை மற்றும் சரக்கு கப்பல்கள் பாலத்தை கடந்து சென்னை, ஒடிசா கோபால்பூர் துறைமுகம் சென்றன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X