மூணாறு:மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில், பெரியவாரை எஸ்டேட்பகுதியில் தற்காலிக மாற்றுப் பாதை நேற்று முன்தினம் இரவு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில், பெரியவாரை எஸ்டேட் பகுதியில் பழமை வாய்ந்த கான்கிரீட் பாலம் ஆகஸ்ட் 15ல் பெய்த கன மழையில் சேதமடைந்தது. அதன் அருகே கன்னியாற்றின் குறுக்கே சிமென்ட் குழாய்கள் பதித்து அமைத்த தற்காலிகமாற்றுப்பாதை செப்.9ல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அதுவும் நவ.15ல்பெய்த கனமழையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.அதனால் மூணாறு- உடுமலைபேட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்நிலையில் மாற்றுப்பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டு, இவ்வழித்தடத்தில்20 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து துவங்கியது.சேதமடைந்த கான்கிரீட் பாலத்திற்கு பதில், புதிய பாலம் கட்ட அரசு ரூ.4 கோடி ஒதுக்கியுள்ளது. அதனை ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கவில்லை என்றால் தென்மேற்குபருவமழையால் மாற்றுப்பாதை சேதமடைந்து,பொது மக்கள் பெரும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.