பெரியகுளம்:தாமரைக்குளம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை பாம்பாறு, கரையோரப்பகுதிகளில் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசுபடுகிறது.கும்பக்கரையிலிருந்து வெளியேறும் நீர், சிற்றோடைகள் வழியாக பாம்பாற்றில் கலக்கிறது. அதனைச்சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. பெரியகுளம் அருதே தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், பங்களாபட்டி பகுதிகளில் சேரும் குப்பையை நிர்வாகம் பாம்பாற்றிலும், கரைப்பகுதியில் கொட்டுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. மீன்கள் செத்து மிதக்கிறது.சில நேரங்களில் குப்பை எரிக்கப்படுவதால், அதிலிருந்து கிளம்பும் புகை அவ்வழியாக செல்வோரை பாதிக்கிறது. நீர்நிலைகளை மேம்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு முக்கியத்துவம் உள்ள நிலையில், பேரூராட்சி பாம்பாற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.