யானைகள் பலியாவதை தடுக்க மின் கோபுர உயரம் அதிகரிப்பு: மின்வாரியம் முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:57

கம்பம்:மின்சாரம் தாக்கி யானைகள் பலியாவதை தடுக்க தேனி மாவட்டம் வெண்ணியாறு வனப்பகுதியில் மின் கோபுரங்களின் உயரத்தை அதிகப்படுத்த மின்வாரியம் முடிவுசெய்துள்ளது.வெண்ணியாறு வனப்பகுதியில் குறிப்பிட்ட இரண்டு உயர் மின் அழுத்த கோபரங்களுக்கு இடையில் மின்சாரம் தாக்கி இதுவரை 5 யானைகள் பலியாகியுள்ளன. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில்பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்ததால் பதறிப்போனமின்வாரியம், வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.உயர்த்த முடிவுயானைகள் பலியானது சுருளியாறு மின்நிலையம்-- கயத்தாறு இடையே செல்லும்110 கிலோ வோல்ட் மின்பாதை. அதன் கம்பிகளிலிருந்து 3 அடி துாரம் வரை ஈர்ப்பு இருக்கும்.இந்த பாதையில் 374 டவர்கள் உள்ளன. அதில் 32 கி.மீ., துாரத்திற்குஅடர்ந்த வனப்பகுதியில் 94 டவர்கள் உள்ளன. வெண்ணியாறு அருகில் டவர் எண் 47 க்கும் 48 க்கும் இடையில் மலைச்சரிவு உள்ளது. அங்கு மின்கம்பிகள் 11 அடி உயரத்தில் செல்கின்றன. இதன் வழியே யானைகள் செல்லும் போது தான் மின்சாரம் தாக்கி பலியாகின்றன.மற்ற இடங்களில் மின்கம்பிகள் 50 அடி உயரத்தில் உள்ளதாக மின்வாரியம் கூறுகிறது. எனவே 47, 48 டவர்களின் இடையே மின்கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்தும் ஆய்வுமேலும் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 94 டவர்களையும் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுஉள்ளனர். டவர் லைன் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இப்பிரச்னை தொடர்பாக சென்னையில் நேற்று மின்வாரிய உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. கோட்டபொறியாளர் அளவிலான அதிகாரிகள் குழு மேகமலை வனப்பகுதியில் விரைவில் ஆய்வு மேற்கொள்கிறது. குறிப்பிட்ட இரண்டு டவர் பகுதிகளில் உயரத்தை அதிகரிக்க வனத்துறையிடமும் ஆலோசிக்கப்படும்,' என்றார்.நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்யானைகள் பலியான வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. நேற்று அதிகாரிகள் ஆஜராகினர்.மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் கலாநிதி: தாழ்வான மின் கம்பிகளை உயர்த்தியமைக்க மின்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மின்வாரிய வழக்கறிஞர்: இந்த வழித்தடத்தில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை 20 முதல் 30 அடி உயரத்திற்கு மாற்றியமைக்கும் பணி 2019 ஜன.,31க் குள் நிறைவடையும். அதுவரை அவ்வழித்தடத்தில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு மாற்று வழித்தடத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படும்.இவ்வழக்கில் மின்வாரியம் ஜன.,3 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X